நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளது.
மேலும், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்தனை எதிர்த்தல் மற்றும் முழு சில கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.இந்த தொழிற்சங்க போராட்டம் நேற்று முன் தினம் (25) நண்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் சட்டப்படி வேலை போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சௌமய குமாரமடு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டப்படி வேலை போராட்டத்தின் ஊடாக மின்சார விநியோகக் கட்டமைப்பு கட்டம் கட்டமாக செயலிழக்கும். மின்சார துண்டிப்புக்கள் இடம்பெறும்.
அதே நிலைமை அதிகரித்துச் செல்லும். நீர் விநியோகம் தடைப்படும். வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழக்கும். எரிபொருள் விநியோகம் தடைப்படும். இலங்கையே முழுவதும் ஸ்தம்பிதம் அடையும். அவ்வாறான ஓர் நிலைமைக்கு எங்களை தள்ள வேண்டாம் என அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.