ஷெவோன் டேனியல் மற்றும் வனூஜ சன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது இலையோ சர்வதேச ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் 19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வெற்றியீட்டியுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக இவ்விரண்டு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் 3:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இலங்கை முன்னிலையில் உள்ளது.
இளையோர் சர்வதேச போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
185 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 14 ஓட்டங்களில் முதல் 2 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷெவோன் டேனியல் மற்றும் பவன் பத்திராஜா நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டனர் இந்த ஜோடி தமக்கிடையில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து இருந்த வேளையில் பவன் பத்திராஜா ஆட்டமிழக்க 89 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்த இலங்கையின் அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற தோட்டங்களுக்கும் ஆறு என சரிவை எதிர்கொண்டது எனினும் ஷெவோன் டேனியல் முருகு முனையில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தார் இவருடன் 6-வது விக்கெட்டுக்காக நிறைந்த வினூஜ ரண்புல் பிரிக்கப்படாத 66 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி 46 தசம் 4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.
ஷெவோன் டேனியல் 114 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகள் அடக்கமாக ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் வனூஜ சஹான் 53 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடக்கமாக பெறுமதிமிக்க 38 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் முஷ்பிக் ஹசன் 3 விக்கெட்டுகளையும் அஷொன் அபிப் 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.