இலங்கை விரையும் இந்திய வெளி விவகார அமைச்சர்!

இலங்கை விரையும் இந்திய வெளி விவகார அமைச்சர்!

இந்திய வெளி விவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது கொரோனா மருந்து தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் 2021 ஜனவரி 5 முதல் 7 வரை மூன்றுநாட்கள் பயணமாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேற்கொள்கிறார்.

இப்பயணத்தின் போது, முக்கிய கவனம் செலுத்தப்படும் விடயங்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் மருந்து காணப்படுவதுடன், இந்தியா தனது அயல்நாடுகளிற்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்பு இரு மருந்துகளிற்கு அனுமதி வழ ங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊடகங்கள், கொரோனா வைரசிற்கு மத்தியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த வருடம் மேற்கொள்கின்ற முதலாவது விஜயம் இது என்றும் குறிப்பிட்டுள்ளன.

இலங்கை இந்திய நாடுகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் காணப்படுவதால் இந்த விஜயம் எயர் பபிள் முறையில் இடம்பெறுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது விஜயத்தின் இலங்கை ஜனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *