இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பிராந்தியத்திற்குள் சமீபத்திய விரோதப் போக்கு வெடித்தது குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான தற்போதைய மோதல்கள் காரணமாக அப் பிராந்தியத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் குறித்து நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். இந்த மோதல் நிலை காரணமாக குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் நிலைமை அண்டைய பிராந்தியங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதால் முழு உலகிற்கும் பேரழிவு தரக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடும்.இன்று பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி காலனித்துவத்தின் விளைவாகும். இந்த பிராந்திய மக்கள் இறையாண்மையை இழந்த காரணத்தினால் மோதல் சூழ்நிலைகளுக்காக விதைக்கப்பட்டதை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.