ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான போலியான காரணங்களை அமெரிக்காஉருவாக்குகின்றதுஎன ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரினை விரும்பவில்லை எனினும் அது தன்னை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி டிரம்பும் அவரது கூட்டாளிகளும் பிராந்தியத்திற்கு பி52 விமானத்தை அனுப்புவதற்கும் ஆயுதங்களை அனுப்புவதற்கும் பில்லியன்கணக்கில் செலவிடுகின்றனர் வீணடிக்கின்றனர் என டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஈராக்கிலிருந்து கிடைக்கும் புலனாய்வு தகவல்கள் அமெரிக்கா போருக்கான போலியான காரணங்களை உருவாக்குகின்றது என்பதை தெரிவிக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் வெளிப்படையாகவும் நேரடியாகவும் தனது மக்களையும் பாதுகாப்பையும் நலன்களையும் பாதுகாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஈரானின் முக்கிய இராணுவதளபதிகளில் ஒருவரான காசிம் சொலைமானி கொல்லப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையிலேயே ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மூன்றாம் திகதி டிரம்பி;ன் உத்தரவினை தொடர்ந்து ஈராக்கில் இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதல் மூலம் அவர் கொலை செய்யப்பட்டார்.
நவம்பர் மாதம் பிற்பகுதி முதல்; அமெரிக்காவின் நிமிட்ஸ் என்ற போர்க்கப்பல் வளைகுடாவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.