இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.இன்று 3,510 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக, அடிக்கல் நாட்டு விழா வேலூர் – மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. தமிழகத்தில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் 106 முகாம்களில் வசிக்கின்றனர். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் விரைவில் நிர்மாணிக்கப்படுமென தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக, முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் நன்மையடையவுள்ளனர். இதற்காக இந்திய ரூபாவில்142.16 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.