பருவத்தில் பயிரிடப்படும் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உர நெருக்கடி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது குருநாகல் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் மாத்திரமே நெல் மற்றும் ஏனைய பயிர்செய்கைகளுக்காக வெற்றிகரமாக தயார் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் புள்ளி விபரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலைமை இப்படியே நீடித்தால் எதிர்காலத்தில் நாடு பாரிய உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.