பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் நாட்டில் அத்தியாவசிய இறக்குமதி பொருட்களுக்கு பாரிய தடுப்பாடு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கும் என அதன் ஊடக பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வரையிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை ஏற்றிவந்த கொள்கலன் துறைமுகத்தில் சிக்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக குறைந்தபட்சம் 100 – 110 மில்லியன் டொலர் பணம் மாதாந்தம் செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.