உதவி கோரி டெல்லி செல்கிறார் கோட்டாபய

உதவி கோரி டெல்லி செல்கிறார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வாறு வரும் அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.அல்கொய்தா, அபுசய்யப் இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் சமீப காலமாக இலங்கையை தங்கள் தளமாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.அரபு நாடுகள் கிழக்கு, தெற்கு ஆபிரிக்க நாடுகள் ஆகியவற்றில் செயல்படும் இந்த பயங்கரவாதிகள் இலங்கையில் நடமாடுவது அதிகரித்துள்ளது.

மேலும் சர்வதேச போதை மருந்து கும்பலும் இலங்கையை போதைப் பொருட்கள் கடத்தும் மையமாக வைத்து இருக்க முயற்சிக்கிறார்கள்.இதை முறியடிக்க இலங்கையில் போதிய படை பலம், புலனாய்வு அமைப்புகள் இல்லை. இதற்கு இந்தியா போன்ற பெரிய நாடுகளுடைய உதவி இருந்தால்தான் முடியும். அதிலும் பக்கத்து நாடான இந்தியாவால்தான் இதற்கு உதவ முடியும்.

எனவே இதற்கான ஒத்துழைப்பை வழங்கும்படி இந்தியாவிடம் கேட்டுக் கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ச இந்தியா வர உள்ளார். சமீபத்தில் கூட கேரள மாநிலம் அருகே சென்ற மர்ம படகை இந்திய கடலோர காவல்படை இடை மறித்தது. அப்போது அந்த படகில் ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருட்கள் இருந்தன.

இந்த படகு இலங்கையை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. இதுபோன்றவற்றை தடுக்க வேண்டுமென்றால் இந்தியாவுடைய உதவி இலங்கைக்கு தேவைப்படுகிறது. எனவே பயங்கரவாதிகளும், போதை மருந்து கும்பலும் இலங்கையை தளமாக மாற்றிவிடாமல் தடுக்க இலங்கை அரசு பயங்கரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *