உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் அலுவலக ஊழியர்கள்

உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் அலுவலக ஊழியர்கள்

2021 ஆம் ஆண்டிற்காக பிரதமர் அலுவலக ஊழியர்கள் தத்தமது பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், தேசிய கொடி ஏற்றியதை தொடர்ந்து புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கான சந்திப்பு இடம்பெற்றது.

முழு நிகழ்வும் சமூக இடைவெளி பேணல் உள்ளிட்ட முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலில் இராணுவத்தினர் உள்ளிட்ட தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்கும்போது கொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஒவ்வொருவரது பொறுப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரியங்கா திலோஷினி ரணசிங்க அது தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் ஒன்றாக உணவு அருந்துவதனால் கொவிட்-19 தொற்று பரவும் அபாயம் ஆகியன குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.

அதனை தொடர்ந்து சுபீட்சமான இலங்கையை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கு பிரதமர் அலுவலக ஊழியர்களினால் வழங்கப்பட வேண்டிய பங்களிப்பு குறித்து பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உரை நிகழ்த்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர் அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *