உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து! டிக்கெட் எடுத்த பயணிகளின் நிலை

உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து! டிக்கெட் எடுத்த பயணிகளின் நிலை

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அதிகம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றும், (24-25) இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட் எடுத்திருந்தனர்.

இருப்பினும் கடைசி நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த 1,259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன் உள்பட பல நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

மேலும், விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலைக்கு வராததாலும், சிலர் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாலும் விமான சேவை நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *