உலக சாதனை படைத்த சீனா! மிரண்டு போயுள்ள உலக நாடுகள்

உலக சாதனை படைத்த சீனா! மிரண்டு போயுள்ள உலக நாடுகள்

ஒவ்வொரு நாளும் சீனா தன்னுடைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து உலக நாடுகளை மிரண்ட வைத்துக் கொண்டுதான் வருகின்றது.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் சீனாவின் அசுர தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக மின்னல் வேகத்தில் பறக்கக்கூடிய ரயிலை சோதனை செய்து கெத்து காட்டு இருக்கிறது.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இரண்டு ரயில்கள் இரண்டு தனித்தனி பாதையில் நேருக்கு நேராக ஓடு பாதையில் மணிக்கு 870 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்ல வைத்து காண்போரை திகைப்படைய வைத்த உலக சாதனை சீனா படைத்துள்ளது.

இந்த இரண்டு சோதனை ரயில்களும் கடந்த மாதம் ஹெனானில் உள்ள திறந்த ரயில் பாதை பிரிவில் ஒன்றை ஒன்று கடந்து சென்றன.

இரண்டு ரயில்களும் முறையை 435 கிலோமீட்டர் முழுமையான வேகத்தில் இயங்கி ஒன்றை ஒன்று கடந்து சென்றதுஇரண்டு ரயில்களும் முழுமையாக கடந்துசெல்ல எடுத்துக்கொண்ட நேரம் 0.86 வினாடிகள் மட்டுமே. அப்படி ஒரு படு வேகத்தில் இரண்டு ரயில்களும் கடந்து சென்றன.

இது சீனாவிற்கு ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி இதுபோன்ற ரயில்களை வேகமாக இயக்கி பல சாதனைகளைப் படைத்து,அந்த சாதனைகளை மீண்டும் சீனாவில் முறியடித்து வருகிறது.

தற்போது கூட கடந்த ஏப்ரல் 12-ம் திகதி தான் ஹெனானின் ஜென்ஜோங் நகரம் தென்மேற்கு சீனாவின் சொங்கிங் வழியாக ஓடும் இரு ரயில்கள் மணிக்கு 806 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு சுரங்க பாதையில் ஒன்றை ஒன்று கடந்து சென்று உலக சாதனை படைத்தன.அந்த சாதனையை இப்போது சீனா முறியடித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *