கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்த விசாரணைகளிற்காக உலகசுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் சீனாவிற்கு செல்வதற்கு சீன அரசாங்கம் தடை செய்துள்ளது வுகானிற்கு செல்வதற்காக ஐக்கியநாடுகளை சேர்ந்த இரண்டு நிபுணர்கள் தங்கள் நாடுகளில் இருந்து புறப்பட்டவேளை சீன அதிகாரிகள் அவர்களிற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனொம் ஹெப்பிரயேசிஸ் தெரிவித்துள்ளார்.
நான் இது குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளேன் நான் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிற்கு சர்வதேச குழுக்களை அனுப்புவதே எனது முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.வுகானிற்கு உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்கள் செல்வதை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.