ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது…

ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது…

 ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது என்றும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் கடுமையான முறையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என்று நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

கொவிட் தாக்கத்தினை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டம் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனால் ஏற்படும் பொருளதார தாக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கள் அனைவரும் ஏதாவதொரு வழியில் எதிர்க்கொள்ள நேரிடும்.

கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தி நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் இவ்விரு துறைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல்வேறு தரப்பினரது கோரிக்கைக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் கடுமையான முறையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *