எனது மகனை அடித்து கொலை செய்தனர் – கண்ணீர் விட்டு கதறும் தந்தை

எனது மகனை அடித்து கொலை செய்தனர் – கண்ணீர் விட்டு கதறும் தந்தை

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால், அவரது மெய்பாதுகாவலரால் ஒருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தாய் தந்தையர் கண்ணீர்விட்டு கருத்து வெளியிடும்போது, 

இன்று காலை வழக்கு விசாரணைக்கு 8 மணியளவில் நாங்கள் வந்திருந்த போதும் எங்களுடைய வழக்கு தாமதமாகவே கூட்டப்பட்டது.  நாங்கள் எதிர்பார்ப்பது என் மகனுடைய கொலைக்கான நீதி கிடைக்க வேண்டும். நீதிபதி ஐயா 15ஆம் திகதி விளக்கம் பெறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் எங்களை மாறி மாறி ஒவ்வொரு இடம் அலைய வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். உடல் கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றதாக இன்று நீதிபதி ஐயா எங்களிடம் கேட்டபோது நாங்கள் மட்டக்களப்பு பொலிசாரிடம் சென்றபோது ஏறாவூர் பொலிசாரிடம் கேட்குமாறு கூறுகின்றார்கள்.

மட்டக்களப்பு பொலிசார் இவ்வாறு எங்களை அங்கேயும் இங்கேயும் அழையவைத்து கொண்டே இருக்கின்றார்கள். திட்டமிட்டு எனது மகனை அடித்து சுட்டு கொலை செய்துவிட்டு இன்று எங்களை நாய் போன்று அழைய வைக்கின்றார்கள்.

எனது மகன் பிழை செய்திருந்தால் அவர்களது சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோக்களை காட்டலாம் தானே எங்களது மகன் பிழை செய்திருந்தால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

சும்மா போன எனது மகனை பிடித்து வைத்து அடித்துக் கொலை செய்துவிட்டு இப்படியே அழைய விடுகின்றனர். இன்று 5 மாதங்கள் கடந்து விட்டது நாங்கள் நீதிபதி நல்லதொரு முடிவை தருவார் என எதிர்பார்க்கின்றோம் என கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த வழக்கிக்கின் சந்தேகநபரை 14 நாட்கள் மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி  உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 15ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *