கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை முடிவுக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சுவிஸில் 2வது டோஸ் போட்டுக்கொண்டு நான்கு மாதங்கள் கடந்த பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, Omicron வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதே நிலை ஆண்டு தோறும் நீடிக்குமா, நாம் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி சொலுத்திக்கொண்டே ஆகவேண்டுமா என்ற அச்சம் மக்களில் எழுந்துள்ளது.
மேலும், கொரோனா ஊரடங்கு உட்பட தீவிர கட்டுப்பாடுகள் ஏற்கனவே பொதுமக்கள் பலரிடம் விரக்தியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தற்போதைய தரவுகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அளவு அதிகரித்தால் கூட ஆபத்து இல்லை என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தற்போது நான்கு மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி அனுமதி அளிக்கப்பட்டது, எதிர்காலத்தில் மீண்டும் நான்கு மாதங்களில் இன்னொரு பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படும் என கூற முடியாது என தடுப்பூசி நிபுணர் Klaus Eyer தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது இருக்கும் சூழலில் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி அவசியம் என்றே கூறும் Klaus Eyer, இன்னொரு புதிய மாறுபாடு உருவானால் அதற்கேற்ப திட்டங்களும் மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.