போராட்ட வெற்றிக்கான சிறந்த ஆயுதங்கள் – மோசே தயான்

போராட்ட வெற்றிக்கான சிறந்த ஆயுதங்கள் – மோசே தயான்

யுத்த கார்மேகம் சூழ்ந்த நிலையில் இருக்கும் இன்றைய இவ்வுலகத்தில் அநேக நாடுகள் தமது ஆயுத பலத்தை அடிக்கடி பகிரங்கப்படுத்தியும், வான விளையாட்டுக்களைக் காட்டியும் மற்றைய நாடுகளை வெருட்டிவருவது அன்றாட செய்தியாகிவிட்டது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், ஆளில்லா அதிவேக தாக்குதல் ட்றோன் விமானங்கள், லித்தியம் மின்கலங்களால் இயக்கப்படும் தாங்கிகள், கடின உலோகத்தால் உருவாக்கப்பட்ட றோபோ வீரர்கள் போன்ற நவீன போராயுதங்களின் எண்ணிக்கை விபரங்களை நாட்டோடு நாடு ஒப்பிட்டு வெற்றி வாய்ப்பை வெளிப்படுத்தும் ஊடகங்களும் கூடிக்கொண்டே போகின்றது. இவை யாவற்றையும் தூக்கி எறிந்து, கண்ணால் பார்க்கக்கூட முடியாத மிகச் சிறிய ஆயுதமாக முழு உலகத்தையும் திக்குமுக்காட வைத்து, பொருளாதாரத்தை முடக்கி, விழி பிதுங்க வைத்துள்ளது, வுகான் நகரத்தில் பிறந்த உயிரியல் ஆயுதமாகிய சைனா வைறஸ் கோவிட் – 19.

அணுவாயுதம், இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் ஆகிய இம் மூன்று ஆயுதங்களும் சகல மக்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு தடை பண்ணப்பட்டபோதிலும் பல நாடுகள் மேற்குறிப்பிட்ட ஆயுதங்களை அனேக இடங்களில் பாவித்துமிருக்கின்றன. அணுவாயுதம் (அணுக்குண்டு) அமெரிக்காவால் யப்பான் நாட்டிலும், இரசாயன ஆயுதங்கள்  சிறிலங்கா, ஈராக் போன்ற நாடுகளால் தம் மக்கள்மீதே பாவிக்கப்பட்டது. உயிரியல் ஆயுதங்கள் பல நாடுகளாலும் அனேக தடவைகள் இரகசியமாகப் பாவிக்கப்படே வருகின்றது. உயிரியல் ஆயுதத்தை முளு உலகத்திற்கும் வெட்டவெளிடச்சமா ஆக்கியது சைனா வைறஸ் கோவிட்-19 தான். “ஆயுத சம பலமே சமாதானத்துக்கான வழி” என்பதற்கு அமைவாக விரும்பியோ விரும்பாமலோ இந்த பேரழிவு ஆயுதங்களை பல நாடுகள் மற்றைய நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டே  இருக்கின்றன.

எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் சிறந்த, துணிகரமான, அதிவேகத் தாக்குதல் அணிகளைக் கொண்ட பெரும் ராணுவ அமைப்பு மட்டுமன்றி கொரில்லாத் தாக்குதல் அணிகளைவிட, தரைப் படை, கடற்படை, வான் படையென முப்படைகளையும் கொண்ட, யுத்த தந்திரோபாய வெற்றித் தாக்குதல்களை நடாத்திய உலகத்தின் முதற்தர விடுதலைப் போராட்ட இராணுவமாகக் கருதப்பட்டது. எந்தப் பெரிய பலவானுக்கும் நிச்சயமாக ஒரு பலவீனம் இருக்கும், என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையான கூற்று ஆகும், அது நாடாகவிருந்தாலும்சரி, தனி நபராகவிருந்தாலும்சரி, இந்த உண்மை மிகப் பொருத்தம். எவன் அந்தப் பலவீனத்தை கண்டுபிடிக்கிறானோ அவனுக்கே வெற்றி சாத்தியம்.

இன்று தமிழர்களாகிய நாம் “ஒரு அடிவாங்கின இனம், ஒரு தோற்கடிக்கப்பட்ட இனம், இவர்கள் ஒருபோதும் ஒற்றுமைப்படமாட்டார்கள், இவர்களைப் பாதுகாத்த விடுதலைப் புலிகளை நாம் அழித்துவிட்டோம்”  என மார்தட்டி ஓலமிடுகின்றது சிங்கத்துக்குப் பிறந்ததாகக் கூறும் சிங்களம். விடுதலைப் புலிகளின் “மெளனிக்கின்றோம்” என்ற வார்த்தையை சிங்களம் மட்டும் அல்ல பல தமிழர்களும் நன்கு புரிந்து கொள்ளவில்லை.  “மெளனிக்கின்றோம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை சொல்லிப் புரிய வைக்கவேண்டிய அவசியமும் இல்லை, உண்மையான உணர்வுடைய எந்த வீரத் தமிழனுக்கும் இது புரியும். மேலும்  “இலங்கை ராணுவம் மிகச் சிறந்தது, எமது நாட்டு வீரர்களுக்கும் பயிற்சி கொடுக்க அவர்களை அழைக்கின்றோம்” என சில நாடுகள் கூறுவது மிகவும் வேடிக்கையாக இருந்தாலும் அதன் சூட்சுமத்தை அறியாதவர்கள் மிகச் சிலர்தான். தமது சில ராணுவத்தையும், ஆயுதங்களையும், ராணுவ இரகசியங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி தமிழர்களை அழித்த நாடுகளும் இந்த நாடுகளே. ஒரு காலத்தில் தமது ஞாயமற்ற சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வராதபடி, தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் அனுபவம் மிக்க மிகவும் வயதுபோன தளபதிகளும், நாம் எங்கே போகின்றோம் எதற்காகப் போகின்றோம் என்று தெரியாமல் அனுப்பப்பட்ட போர் வீரர்களுமே.

இரண்டு லட்சம் அப்பாவி மக்களை மாதக்கணக்காக பட்டினி போட்டு, பல நாட்டு ராணுவத்தையும், பெண்ணிற்கும் பொன்னிற்கும் விலைபோன ஓட்டியகங்களைச் சேர்ந்த சில எட்டப்பன் கூட்டத்தையும் சேர்த்து, செத்த பாம்பை அடிப்பதுபோல் எம் மக்களை ஈவிரக்கமின்றி கொண்றழித்தது சிங்கள அரசாங்கம்.  சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இந்த வயோதிப தளபதிகள் உயிரோடு இருக்கமாட்டார்கள், உயிரோடு இருக்கும் படை வீரர்களுக்கும் சொல்வதற்கு எதுவும் இருக்காது. இன்று குற்றம் செய்தவனையே விசாரிக்கும்படி மேற்கத்தைய நாடுகளும் அயல் நாடுகளும் கூறுவதன் காரணமே இவைதான். தன்னோடு சேர்ந்து கொலை செய்தவனை காப்பாற்றும் செயலே இது.

எமது விடுதலைப் போராட்டம் தற்காலிக தோல்வி கண்டதற்கு பல காரணங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் எழுதுவதென்றால் கட்டுரையாக அமையாது ஒரு புத்தகமாகவே அமையும். யுத்த இரகசிய ஆயுதங்கள், மேற்கத்தைய நாடுகளின் வேளிவராத அதி உயர் தொலில்னுட்பக் கருவிகள், தன்னியக்க அதி நவீன ஆயுதங்கள் பற்றிய விபரங்களை முளுவதுமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிந்திருந்தார்களா, அல்லது ஓரளவுக்குமட்டும் அறிந்திருப்பார்களா  என்பது பற்றி ஆராய்வதே இன்றைய கட்டுரையாகும்.  அதற்காக ஒரு சில ஆயுதங்களையும் அவை பாவிக்கப்பட்ட ஆண்டுகளையும் இனி வரப்போகும் ஆயுதங்களையும் ஆராய்ந்து பார்ப்போம். 

எஸ். ஆர் – 71 பிலாக் பேட் (கரும் பறவை) SR – 71 BLACKBIRD    

இந்த  எஸ். ஆர் – 71 பிலாக் பேட் (Blackbird) விமானம். அமெரிக்காவின் லொக்கீட் ஸ்தாபனத்தால் (American Lockheed Corporation). 1960ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு 1966ம் ஆண்டு, ஜனவரி மாதம் அமெரிக்க விமானப் படையாலும்  நாசாவாலும் (NASA – National Aeronautics and Space Administration) உபயோகத்திற்கு விடப்பட்டது. இந்த விமானம் அதிக உயரத்தில் பறப்பது மட்டுமன்றி மிக வேகமாயும் பறக்கக்கூடியது.

இதன் வேகம் :  3,540 km/h (மணித்தியாலத்திற்கு 3,540 கிலோ மீற்றர்கள்)

முதற் பறப்பு (Maiden flight)Dec. 22, 1964 (22ம் திகதி மார்கழி மாதம் 1964 ம் ஆண்டு)

நீளம் :     32.74 m

செட்டை விசாலம் (Wingspan):  16.94 m

பிரயாணிகள்:    2

இவ்விமானம் ஒரு மணித்தியாலத்தில் 100,000 சதுர மைல் பரப்பளவை துல்லியமாகப் படம் எடுக்கக்கூடிய உபகரணத்தை கொண்டவை மட்டுமல்லாது, சகல தொலைதொடர்பு மின்னலைகளையும் உள்வாங்கி, அந்தச் செய்தி என்ன? எவரிடம் இருந்து எவருக்கு செல்கிறது என்ற விபரங்களை மிகத் துல்லியமாக சேகரித்து அனுப்பக்கூடியவை. அது மட்டுமல்லாது இதனது வேகமும் பறக்கும் உயரமும் எந்த ஏவுகணைத் தாக்குதல்களுக்கும் தப்பித்துக் கொள்ளக்கூடியதாக அமைந்தது. இந்த விமானத்தை உருவாக்குவதற்கான முக்கிய நோக்கம் உளவு பார்த்தல் மட்டுமே.

இந்த SR-71 விமானங்கள் 32 மட்டும் உருவாக்கப்பட்டது அவற்றில் 12 விபத்துக்குள்ளாகி அழிந்தது ஆனால் எந்த விமானமும் எதிரியின் தாக்குதலால் அழிக்கப்படவில்லை. இவற்றின் சேவை அரசியல் காரணங்களால் 1988 ல் நிறுத்தப்பட்டு பின்பு மறுபடியும் 1990 ல் பாவனைக்கு எடுக்கப்பட்டு இறுதியில் 1998 ல் இவற்றின் சேவை முற்றும் முளுதுமாக நிறுத்தப்பட்டது, ஆனால் நாசா (NASA) 1999 லேயே இவ்விமானத்தின் பாவனையை நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து (UAV – unmanned aerial vehicle) ஆளில்லாமல் இயங்கும் விமான உற்பத்தியில் முளு அவதானத்தையும் செலுத்த ஆரம்பித்தனர். யு ஏ வி என அழைக்கப்படுவது பல கணணிகள் உதவியோடும் அதி உயர் உணர் கருவிகளின் உதவியோடும் இயங்கும் விமானங்களாகும்.  (an aircraft piloted by remote control or onboard computers).  ஆனாலும் மனிதனால் இயக்கப்படும் மிக உயரத்திலும், அதிவேகத்திலும் இயங்கும் விமானம் என்ற பெயரை 1976 ல் பெற்ற சாதனையை 2020 வரை எந்த விமானமும் எட்டவில்லை.

மார்ட்டீன் எஸ் ஆர் – 72 (Lockheed Martin SR-72)

இந்த விமானம் “கரும் பறவையின் மகன்” (Son of Blackbird) என அழைக்கப்படுவதும் உண்டு. எஸ் ஆர் 71 இன் வேகம் 3.2 மக் (Mach) ஒலியின் வேகத்தைவிட 3.2 மடங்கு கூடிய வேகம். ஆனால் இந்த எஸ் ஆர் – 72  வின் வேகம் மக் 6, அதாவது ஒலியைவிட ஆறுமடங்கு கூடியது, மணித்தியாலத்திற்கு 4500 மைல்களைவிடக் கூடியது. எந்தக் கண்டத்தையும் ஒரு மணி நேரத்தில் கடக்கக் கூடியவை.  ஒலியின் வேகம் 20 பாகை செல்சியசில் (68 F), ஒரு வினாடிக்கு 1125 அடிகள். அப்படியாயின் 6 மக் வேகம் 6750 அடி ஒரு வினாடிக்கு ஆகும். அத்தோடு இதநோடு இணைக்கப் படும் அதி நவீன உளவறியும் கருவிகளும் மிக அதிகமாகும். இந்த விமானத்தின் உருவாக்கம் 2013 ல் லொக்கீட் மார்ட்டீனினால் ஆரம்பிக்கப்பட்டது, இதன் உபயோகம் 2023 ல் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இன்று 10 மக் (Mach ) வேகத்திற்கும் கூடுதலாகப் பறக்கக்கூடிய தாக்குதல் ட்றோன்களும் (Drone), உளவறியும் ட்றோன்களும் பாவனையிலும் தொடர்ந்து உற்பத்தியிலும் உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி 3ம் திகதி ஈரானிய மேயர் ஜெனறல் குவாசிம் சொலெய்மானி (Qasem Soleimani) பக்தாத் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொணால்ட் ட்றம்ப் அவர்களின் கட்டளையின்கீழ் ட்றோன் (drone) விமானத் தாக்குதலால் துல்லியமாக இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டதை யாவரும் அறிவோம்.

1964ம் ஆண்டிலேயே அமெரிக்காவிடம், நிச்சயமாக ஏனைய வல்லரசுகளிடமும் இப்படியான நவீன உபகரணங்களும், ஆயுதங்களும் இருந்திருக்கின்ற காரணத்தால் எமது போராளிகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் எவ்வளவு துல்லியமாக இவர்கள் அறிந்திருப்பார்கள்! ஆனால் இவர்கள் ஒவ்வொரு நகர்வையும் அறிந்திருக்கிறார்கள் என்பதை விடுதலை புலிகள் முற்றும் முளுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.அப்படி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் அவற்றை முறியடிக்கும் பெலனை அவர்கள் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து.

மேலும் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி ராணுவத்தினாலேயே அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகின்றது. இன்றைய “முகம் அறி கருவி” (Face Recognition system) மூலமாகவும் 4G, 5G போன்ற தொலை தொடர்புகள் மூலமாகவும் எவரும் எதையும் மறைக்க முடியாத நிலையில் உள்ளோம், இன்னிலையில் ஆயுதப் போராட்டம் மிகக் கடினமானதொன்றாக இருந்தாலும் இயலாத காரியம் என்று ஒன்றுமில்லை (Nothing is impossible). “கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு” என்ற பெரியோர் வார்த்தையை விட கத்தியையும் தீட்டி புத்தியையும் தீட்டுவதே இன்றைய எமது விடுதலப் போராட்டத்தின் தேவையாகும். கல்வியா,? செல்வமா? வீரமா? எமது போராட்டத்திற்கு உகந்தது? இன்று எமது புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெரும் பணபலம் கொண்டவர்களாக இருக்கின்றதோடு, புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் சகல துறைகளிலும் அதி உயர் கல்விகற்கின்றவர்களாகவும் இருக்கின்றனர், வீரம் எமது  மரபணுவில் (DNA) ல்  உள்ள அழிக்க முடியாத காரியம், இவற்றைப் பார்க்கும்போதும் , உலகம் முளுவதும் சிதறடிக்கப்பட்ட யூத இனம், பல நூற்றாண்டுகளின் பின் மிகுந்த பண பலத்தோடும், படை பலத்தோடும் நாடு திரும்பி இன்று முளு உலகத்தையும் ஆட்டிப் படைப்பதைப் பார்க்கும் போதும் எமது தமிழீழம் அமைவது சாத்தியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பணத்திற்காக விலைபோகும் இராசபக்சாக்கள், தமது நாட்டை பங்கு போட்டு விற்கும்போது இவர்களை ஏன் எம்மால் பணத்திற்கு வாங்க முடியாது? கல்வியின் உச்சத்திற்குச் சென்றுகொண்டிருக்கின்ற எமது எதிர்கால சமுதாயத்தால் ஏன் எந்த தொலில் நுட்ப கருவிகளையும் முறியடித்து சமகால யுத்த தந்திரத்தில் ஈடுபட்டு புதிய முறையில் யுத்தத்தை தொடர முடியாது? இவை யாவற்றிற்கும் மேலாக மகா பாரதத்தில் சகுனியின் பாத்திரத்தை எடுத்து எமது போராட்டத்தில் எதிரியின் தந்திரங்களை சகுனி ஆட்டம் ஆடி எதிரிகளை முறியடிப்பதே இக் காலத்திற்கேற்ற வழியாகும்.    

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *