எதிர்வரும் காலங்களில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். "உலகச் சந்தையில் விலைகள் உயரும் போது எரிபொருள் விலையை அதிகரிக்காத மிகச் சில நாடுகளில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்," என்று அவர் சுட்டிக்காட்டினார். "உலகளாவிய எரிபொருள் விலைகள் அதிகரித்துக்கொண்டிருந்தாலும், இந்த நாட்களில் மக்கள் சுமக்கும் சுமையை நாங்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளதால், எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்," என்று அமைச்சர் கூறினார். இலங்கையிலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், டீசல் மற்றும் பெற்றோல் (LP 92) ஆகிய இரண்டு வகையான எரிபொருட்களின் விற்பனை வீழ்ச்சியால் ஏற்பட்ட பெரும் இழப்பு காரணமாக இரண்டின் சில்லறை விற்பனை விலையை லங்கா ஐஓசி(IOC)லிட்டருக்கு 5 ரூபாவால் அக்டோபர் 21 நள்ளிரவு முதல் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.