ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு மீண்டும் திரும்பவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு மீண்டும் திரும்பவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு  மீண்டும் திரும்பவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பார்வையாளர் என்ற அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு திரும்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கான  அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பதில்பொறுப்பதிகாரி மார்க்கசைரே இதனை அறிவித்துள்ளார்.இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனும் இதனை உறுதி செய்துள்ளார்.

ஜோ பைடன் நிர்வாகம் அமெரிக்காவை மனித உரிமைகள் ஜனநாயகம் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட வெளிவிவகார கொள்கைக்கு மீளஅர்ப்பணிப்பு செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்திற்கு சர்வதேச அமைப்புகளை பயன்படுத்துவது முக்கியமானது என தெரிவித்துள்ள அவர் இதனடிப்படையில் ஐக்கியநாடுகள் பேரவையுடன் உடனடியாக வலுவான ஈடுபாட்டை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் எனவும் இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தவறுகள் நிறைந்த அமைப்பு என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்,அதனை சீர்திருத்தவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *