ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

கோவிட் வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 33 கோடி பேருக்கு கோவிட்  தொற்று ஏற்பட்டுள்ளது. கோவிட் பரவலை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. சில நாடுகள் உருமாறிய கோவிட்  வைரஸ் பரவாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசிகளையும் அறிமுகம் செய்துள்ளன.

இந்நிலையில் அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவிட் வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். அதுமட்டும் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களாக கருத்தப்படுவர். அவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *