ஐக்கிய மக்கள் சக்தியை, மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath fonseka) தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடிமட்ட ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவர்களை கவரும் வகையிலான காத்திரமான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீரிகம பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் மாற்று அரசியல் சக்தியாக, ஐக்கிய மக்கள் சக்தியை இன்னும் கருதத் தொடங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த 50 வீதமானவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் பல உறுப்பினர்கள் மீது எவ்வித ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் மோசடிகளை தடுப்பதாக கூறி ஆட்சிப் பீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.