ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 44வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் களமிறங்கினார். அணி ஸ்கோரில் 27 ரன்களுடன் பாடிக்கல் வெளியேறினார். பின்னர் கேப்டன் சாம்சன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின் டேரில் மிட்செல் பட்லருடன் நிதானமாக விளையாடினார்.
டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம், பட்லர், ஒரு சிறந்த அரைசதம் விளையாடினார் மற்றும் மும்பையின் ஹிருத்திக் ஷோகீனுக்கு தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை அடித்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் களமிறங்கினர். ஏமாற்றம் அளித்த கேப்டன் ரோகித் சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினர். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து திலக் வர்மா 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நுழைந்த டிம் டேவிட் 9 பந்துகளில் அதிரடியாக 20 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் தொடர் 8 தோல்விகளுக்கு பிறகு மும்பை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.