ஐபோன்கள் வாடிக்கையாளர்களை குறிவைத்து சதி செய்துள்ள இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருள் நிறுவனம்

ஐபோன்கள் வாடிக்கையாளர்களை குறிவைத்து சதி செய்துள்ள இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருள் நிறுவனம்

உளவு மென்பொருளான பெகாசஸின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த ஸ்பைவேர் மூலமாக அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக  சர்ச்சையை  ஏற்படுத்தியது.அதேபோல் உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்களும் பெருமளவில் ஒட்டுக்கேட்கப்பட்டது தெரியவந்துள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தனது செயலிகளை ஐபோன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், தங்களின் 165 கோடி உபகரணங்களில் ஐபோன்கள் மட்டும் 100 கோடி எண்ணிக்கையில் உள்ளன. இதனால் தங்களின் வாடிக்கையாளர்களை குறிவைத்து என் எஸ் ஓ பெரும் சதி செய்துள்ளதுதாக ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால், என்.எஸ்.ஓ நிறுவனம், பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க அரசாங்கங்களுக்கு உதவும் செயலுக்காக மட்டுமே பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கியதாக தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *