ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை.

ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்கள் இரண்டின் பிரதானிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாத்தறை மாவட்ட கொவிட் செயலணிக் குழுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.கொரோனா நோயாளிகள் அதிகரிப்பை அடுத்து அவர்களுக்கு வழங்கும் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவலை முற்றாக நிராகரிப்பதுடன். அதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் நாளாந்த ஒட்சிசன் தேவை 22 ஆயிரம் லீற்றர்களாகும். இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனங்கள் இரண்டும் நாளாந்தம் 67 ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை உற்பத்தி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதன் பிரகாரம் நாட்டில் ஒட்சிசனுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை. எனினும், இந்த ஒட்சிசன் அளவு போதுமானதாக அமையாவிடின் சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசனைக் தருவிப்பதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *