ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இராணுவ ஒத்திகையொன்றின் போது இந்து சமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளனர்.
ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான இன்று இந்துசமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்று செலுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் மத்திய பாலைவன பகுதியில் ஈரான் இந்த ஒத்திகையை நடத்தியுள்ளது.வெள்ளிக்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை சோதனை செய்துள்ளது.
இதன் பின்னரே இந்துசமுத்திரத்தை இலக்குவைத்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.
எதிரிகளின் போர்க்கப்பல்களிற்கு எதிராக ஏவுகணைகளை பயன்படுத்துவதே எங்கள் முக்கியமான பாதுகாப்பு கொள்கை என தெரிவித்துள்ள புரட்சிகர காவல்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சொலாமி தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணைகள் 1800 கிலோமீற்றர் தூரம் செல்லக்கூடியவை என தெரிவித்துள்ள அவர் எங்களால் கடலில் நகரும் இலக்குகளை தாக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.