தனிநாடு சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதே அரசின் விருப்பம் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் அதிவிசேட வர்த்தமானி மூலம் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதனை அமல்படுத்துவதற்கான 13 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார் இந்த குழுவின் தலைவராக வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் இடம்பிடித்துள்ளார் இவர் ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்த அதன்காரணமாக தண்டிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்படும் வெளியில் வந்தவர் எத்தனையோ சர்ச்சையில் ஈடுபட்டவர் அப்படிப்பட்ட ஒருவரை தலைவராக நியமித்து ஒரு நாடு ஒரு சட்டம் என வலியுறுத்த முடியாது.
இக்குழுவின் பெயரளவில் கூட ஒரு தமிழர் இல்லை ஒரு சில முஸ்லிம்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் அப்படி என்றால் இந்த தமிழர்களுக்கு சொந்தம் இல்லையா தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமைகள் இல்லையா என்ற கேள்வியை இலங்கை ஜனாதிபதியே பார்த்துக்கொள்கிறோம் ஒரு இனக்குழு இருக்கும் நாட்டிலேயே ஒரு நாடு ஒரு சட்டம் பொருத்தம் ஆனால் இலங்கை பல்வேறு இனத்தவர்கள் மற்றும் மதத்தவர்கள் என பல்லின மக்கள் வாழும் நாடு இலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது அமல்படுத்தப் போகிறீர்களானால் அது பௌத்தத்தை மட்டுமே சார்ந்ததாக அமையும் இதனால் தமிழர்களை இந்த நாட்டை விட்டு கழுத்தில் பிடித்துத் தள்ளுவதில் உணர்கிறோம் இந்நாட்டின் பிரஜைகள் இல்லை என்ற நிலைக்கு தமிழர்களை அரசு தள்ளிவிடுகிறது இதன் மூலம் நாங்கள் ஒரு தனிநாட்டை சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா ? என்ற கேள்வியை கேட்க விரும்புகிறோம் இதைத்தான் செய்வதற்கு எம்மை தூண்டுவீர்கள் என்றால் அதற்கு நாம் தயாராக உள்ளோம் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.