ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்த நாடு!

ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்த நாடு!

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரியாவில் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது.

கொரோனா பரவல் சில நாட்களாக ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. குறிப்பாக, நைஜீரியா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டும் போதும் போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு மண்ணில் புதைந்து அழித்துள்ளது. காலாவதியானதால் 10 லட்சத்து 66 ஆயிரத்து 214 கோரோனா தடுப்பூசி டோஸ்களை மண்ணில் புதைத்து அழித்துள்ளதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகள் நன்கொடையாக வழங்கிய 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஓரிரு வாரத்தில் காலாவதியாகும் சூழ்நிலையில் இருந்துள்ளது. இதேவேளை நைஜீரியாவில் மருத்துவ கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் கொரோனா தடுப்பூசி மீது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அந்த வகையில் கையிருப்பில் இருந்த 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் காலாவதியானதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்துள்ளனர். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *