ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட நிலையில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தான்சானியா நாட்டின் Zanzibar யில் உள்ள பெம்பா தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மேலும் 22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 குழந்தைகளின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடல் ஆமைக்கறியில் விஷம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இவ்வாறு ஆமைக்கறிகளை சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, Madagascar யில் கடந்த மார்ச் மாதம் ஆமைக்கறியை சாப்பிட்டு 19 பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் எதிரொலியாக, ஆமைக்கறி சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.