ஒரே நேரத்தில் பல டிவைஸில் பயன்படுத்தலாம் – WhatsApp-ல் புதிய அம்சம்

ஒரே நேரத்தில் பல டிவைஸில் பயன்படுத்தலாம் – WhatsApp-ல் புதிய அம்சம்

ஒரே அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை WhatsApp நிறுவனம் மிக விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அம்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வாட்ஸ்அப் தலைவர் வில் காட்கார்ட் (Will Cathcart) மற்றும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப்பின் Multi-Device-Feature எனும் இந்த புதிய அம்சம் தனிநபர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு கேஜெட்களில் ஒற்றை வாட்ஸ்அப் கணக்கை இயக்க அனுமதிக்கும். வாட்ஸ்அப்பில் இந்த அம்சமானது ஆரம்பத்தில் ஒரு ஸ்மார்ட்போனிலும் அதே நேரத்தில் 4 வெவ்வேறு சாதனங்களிலும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட்போன்களை ஆதரிக்காது என்பதை இது குறிக்கிறது.

ஒரு ஒரு ஸ்மார்ட்போனை தவிர்த்து, WhatsApp Web, WhatsApp Desktop மற்றும் Facebook Portal smart display போன்ற மற்ற சாதன வடிவங்களில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்துடன் சேர்த்து Disappearing mode மற்றும் View once என்ற தேர்வுகளும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *