எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கடுமையான சுகாதார நடைமுறைகள் கொண்டுவரப்படலாம் என சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்களை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி எதிர்வரும் மாதம் இந்த கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் கோவிட் தொற்று பரவுகை ஏற்படுவதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத நிலையை அவதானிக்க முடிவதாக சுகாதார தரப்பினை சேர்ந்த பலர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ள இந்த சந்தர்ப்பர்த்தில் குறித்த கடுமையான சுகாதார நடைமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் அதிகளவில் ஒன்று கூடுதல் மற்றும் வழமையான புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பனவற்றை நடத்த அனுமதி அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.