இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் கோட்டாபய அரசின் செயலை நியுயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த செயற்பாடு ஒரு பாரபட்சமான நடவடிக்கை என அந்த கண்காணிப்பகம் சாடியுள்ளது.
கட்டாய தகனம் என்பது பொதுசுகாதார வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் இது சிறுபான்மையினரைத் தண்டிப்பதற்கான புகைமூட்டத்திரை எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய மரபுக்கு இணங்க சடலங்களை அடக்கம் செய்வது பொதுசுகாதாரத்துக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் தெரிவிப்பது மோசமான வாதம் எனவும் இது சிறுபான்மையினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.