ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிக வருமானம் ஈட்டும் தரை நடவடிக்கை பிரிவு தாமதமாகியுள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களின் வருகை காரணமாக கொரோனா நெருக்கடியின் போது 400 தரைப்படை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜனக விதானபத்திரன(Janaka Vidanapathirana) தெரிவித்தார்.
தற்போது வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, விமான நிலையச் செயல்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், குறித்த நேரத்தில் தரைப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள முடியாமல் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலை குறித்து பல சர்வதேச விமான நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தரைவழிச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விமான நிலைய நில செயல்பாடுகள் ஆண்டுக்கு 100 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றன.