கனடாவில் இனி Uber Eats-ல் கஞ்சாவை ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் Uber Eats நிறுவனம் கஞ்சா விற்பனையாளரான Tokyo Smoke-உடன் கூட்டு சேர்ந்துள்ளது.அதன்படி, பயனர்கள் Uber Eats செயலில் உணவுகளை ஆர்டர் செய்வதுபோல இனி கஞ்சாவையும் ஆர்டர் செய்யலாம்.
ஆனால், வீட்டிற்கே சுமேரு டெலிவரி செய்ய இன்னும் கிடைக்கவில்லை. Uber Eats போன்ற சேவைகளில் இருந்து மூன்றாம் தரப்பு விநியோகம் கனடாவில் இன்னும் சட்டப்பூர்வமாக இல்லை.
இப்போதைக்கு, ஒன்ராறியோ மக்கள் தங்களுக்கான கஞ்சாவை Uber Eats-ல் ஆர்டர் செய்த பிறகு, உங்களுக்கான பொருள் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள Tokyo Smoke ஸ்டோர்களில் பிக்-அப் செய்ய தயாராக இருக்கும், நீங்கள் நேரடியாக சென்று உடனடியாக வாங்கிச் செல்லலாம்.ஆனால், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரை கடையில் எடுக்க வரும்போது, விதிமுறைகளின்படி அவர்கள் தங்கள் ஐடியைக் காட்ட வேண்டும்.ஏற்கனவே மதுபானங்களை விநியோகிக்கும் Uber Eats, சில காலமாக வளர்ந்து வரும் கஞ்சா சந்தையில் அதன் பார்வையை அமைத்துள்ளது.