கனடாவில் வரலாறு காணாத வெப்பம்! 69 பேர் பலியான சோகம்

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்! 69 பேர் பலியான சோகம்

கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரலாறு காணாத அளவிற்கு உயர் வெப்பநிலையாக 49.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கனடாவின் மேற்கு மற்றும் அமெரிக்க பசிபிக் வடமேற்கில் அதிகரித்துள்ள வெப்ப அலையின் விளைவாக, வான்கூவர் (Vancouver) பகுதியில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராயல் கனடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) கருத்துப்படி, கடந்த 24 மணி நேரத்தில் வான்கூவர் புறநகர்ப் பகுதிகளான பர்னாபி மற்றும் சர்ரேயில் ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை வயதானவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக, கனடாவின் மிக உயர்ந்த வெப்பநிலை பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் 49.5 டிகிரி செல்சியஸில் (121 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. கனடாவின் வெப்பநிலை இதுவரை 45 டிகிரி செல்சியஸை (113 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியது இல்லை.

அனால் நேற்று “மாலை 4:20 மணிக்கு, லிட்டன் காலநிலை நிலையத்தில் முன்றாவது நாளாக 49.5 ° C என பதிவாகி, தினசரி மற்றும் அனைத்து நேர வெப்பநிலை சாதனைகளையும் (all-time temperature records) முறியடித்தது” என்று கனடாவின் வானிலை ஆய்வு மையம் (Environment and Climate Change Canada) ட்விட்டரில் வெளியிட்டது.

Natural Resources Canada எனும் புதிய இயற்கை வளங்கள் ஆய்வின்படி, தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் உட்பட பெரும்பான்மையான கனேடியர்கள் இதுபோன்ற தீவிர வானிலையை சமாளிக்க தயாராகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் , பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன், கனடாவின் வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் யூகோனின் ஒரு பகுதிக்கும் கனடாவின் வானிலை ஆய்வு மையம் வெப்ப எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *