கல்வி அமைச்சின் செயலாளருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்(Mahinda Rajapaksa) முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பதவிக்கு வேறொரு நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தினேஸ் குணவர்தன பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் பதவிக்கு, கல்வி அமைச்சர் ஒருவருடைய பெயரை பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.