காசா மீது தாக்குதல்- அமெரிக்கா, இங்கிலாந்தில் கண்டன போராட்டம்

காசா மீது தாக்குதல்- அமெரிக்கா, இங்கிலாந்தில் கண்டன போராட்டம்

காசா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன், பிலடெல்பியா, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாஸ்டனில் இஸ்ரேல் தூதரகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினார்கள். வாஷிங்டனில் உள்ள மைதானத்தில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காசாவில் நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அமெரிக்கா உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.இதேபோல கனடாவில் உள்ள ஒன்டாரியா, டொரண்டாவில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.இங்கிலாந்தில் இதேபோல போராட்டம் நடந்தது. லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாக சென்றனர். இதேபோல இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *