கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார் வாடகைக்கு பெற்றுக்கொண்ட நிலையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான இந்த கார், வாடகை அடிப்படையில் சிலரினால் கொண்டு செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், காரின் சாரதி மீது தாக்குதல் நடத்திய சிலர், காரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபர்கள் எதற்கான இந்த காரை கடத்திச் சென்றார்கள் என்பது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களினால், இந்த கார் வாடகை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனத்தை கடத்திச் சென்றதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு சில பொலிஸ் குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கண்டுபிடிக்கப்பட்ட கார், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.