காணொளி தொழில்நுட்பத்தினூடாக உறவினர்களை சந்திக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி

காணொளி தொழில்நுட்பத்தினூடாக உறவினர்களை சந்திக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி

சிறைச்சாலை கைதிகள், தமது உறவினர்களை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பதற்கு இன்று (15) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளதாவது, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்தே இதன் முதலாவது செயற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

கைதிகளின் உறவினர்கள் வௌிநாடுகளில் இருந்தால் கூட, அவர்களுடன் காணொளி தொழில்நுட்பத்தினூடாக  உரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதிகள், தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளுக்கு தெரியப்படுத்தி தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று கூடியவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 1000 கைதிகளை விடுவிக்க எதிர்பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *