கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியாத அளவில் மாவட்டத்தின் நிலைமை காணப்படுகிறது.
பெரும் சுற்றுச் சூழல் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
குறிப்பாக இரணைமடு குளத்தின் அண்டிய பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் மாவட்டத்தில் உள்ள பல தரப்புக்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்ற போதும் எவ்வித பலனும் கிட்டவில்லை.
குளத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பின்னால் அரசியல் செல்வாக்கு, அதிகார செல்வாக்கு, சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்களின் செல்வாக்கு என பல உயர் மட்ட செல்வாக்குகள் காணப்படுகின்றன என்பது கவலைக்குரியது.
இப்படியே சென்றால் மாவட்டத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
படங்கள் – இரணைடுகுளத்தின் கீழ் பகுதிகளில் அன்மைய நாட்களில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு பகுதிகளை மாவட்ட மேலதிக அரச அதிபர், இரணைமடுகுளத்தின் பொறியியலாளர், அனர்த்தமுகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர், இராணுவும் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.