கிழக்கு கொள்கலன் முனைய உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றவேண்டும்- இந்திய தூதரகம்

கிழக்கு கொள்கலன் முனைய உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றவேண்டும்- இந்திய தூதரகம்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி அளித்து ஒரு சில மணித்தியாலங்களில் இலங்கைக்கான இந்திய தூதரக பேச்சாளர் ஒருவரின் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு மே மாதம் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக இலங்கை ஜப்பான் இந்தியா ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட முத்தரப்பு உடன்படிக்கையை இநத மூன்று நாடுகளின் ஒத்துழைப்புடன் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பினை நான் மீள வலியுறுத்தவிரும்புகின்றேன் என இந்திய தூதரக பேச்சாளர் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பில் பல முறை தெரிவித்துள்ளோம் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தெரிவித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவது என இலங்கை அமைச்சரவை மூன்று மாதத்திற்கு முன்னர் தீர்மானித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *