குளிரூட்டியில் இருந்த பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு .

குளிரூட்டியில் இருந்த பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு .

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக திடீரென பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார். கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால், ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் இருக்கும் நிலை உருவானது. இந்த நிலையில், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் பெற்றோர்கள், குண்டர் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி இடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த ஹேரேன் பால் , பாபு, பைக் பாபு (27) மற்றும் அருளானந்தம் (34 ) ஆகியோர் சிபிஐ போலீசாரால் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அருளானந்தம் என்பவர் அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணியை சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பர்களே இது அரசியல் சண்டை இல்லை அது எந்த கட்சியாக இருந்தாலும் தவறு தவறே. தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். கட்சியை கடந்து உண்மைக்கு குரல் கொடுங்கள்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *