குழந்தைகளின் கண்முன் பெற்றோர் படுகொலை! – இங்கிலாந்தில் நடந்த கொடூரம்

குழந்தைகளின் கண்முன் பெற்றோர் படுகொலை! – இங்கிலாந்தில் நடந்த கொடூரம்

பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கையால் பார்க்கிங் (Parking) பெரும் பிரச்னையாக மாற்றியுள்ளது.பார்கிங்கால் அவ்வபோது பல சண்டைகள் ஏற்படுகின்றன. இந்த சண்டைகள் மிகப் பெரியதாகி வன்முறையில் முடியும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் வருகின்றன.

அந்த வகையில், இங்கிலாந்தில் வாகனம் நிறுத்துவது (Parking) தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, அந்த தகராறு கொலையில் முடிந்தது. இதனால் ஒரு தம்பதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த ​​தம்பதியரின் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் கண் முன்னே இறந்ததைக் கண்டு குழந்தைகள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதான பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்

‘தி சன்’ செய்தியின்படி, சோமர்செட்டின் நார்டன் ஃபிட்ஸ்வாரனில் வசிக்கும் 36 வயதான ஸ்டீபன் சாப்பிள் (Stephen Chapple) மற்றும் அவரது மனைவி ஜெனிஃபர் (Jennifer) ஆகியோர் நவம்பர் 21 இரவு கொடூரமாக கொல்லப்பட்டனர்.இவர்கள் வீட்டருகில் வசிக்கும் இளைஞருடன் வாகனம் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தனது தோழர் ஒருவருடன் அங்கு சென்றுள்ளார்.இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து, நிதானத்தை இழந்த இளைஞரும் அவரது தோழரும் தம்பதியைக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மருத்துவமனை செல்வதற்குள் மரணம்

அந்த இளைஞருக்கு வாகனம் நிறுத்துவது தொடர்பாக தம்பதியினருடன் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. ஆனால், இந்த விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் (Police) தெரிவித்தனர். பலத்த காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

சம்பவத்தின் போது குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களை காயப்படுத்தவில்லை.

இதற்கு முன்பும் சர்ச்சை ஏற்பட்டது

இந்த ஜோடி அனைவருடனும் மிகவும் நட்பாக இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். ஸ்டீபன் சாப்பல் ஒரு ஆசிரியராக இருந்தார். அவருடைய மனைவி வீட்டில் வசித்து வந்தார். இருவரும் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொண்டதை யாரும் பார்த்ததில்லை.ஒருமுறை இவர்களின் வாகனம் நிறுத்துவது தொடர்பாக சிறிய தகராறு ஏற்பட்டு, பொலிஸாரு் வரவழைக்கப்பட்டனர். அப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் தகராறு ஏற்பட்டது.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *