ஸ்மார்ட்போன்களில் நாம் பல்வேறு விதமான ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் வசதிகள் மிகவும் அருமையாக பயன்படுகின்றன. ஆனாலும் ஒரு சில ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் நமது எஸ்எம்எஸ், ஓடிபி, அழைப்புகள் போன்றவற்றை திருடும் வகையில் வாய்ப்பு உள்ளது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர் தற்போது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, Quick Heal பாதுகாப்பு ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் 8 ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட 8 புதிய ஆப் வசதிகளை கண்டறிந்துள்ளனர். அப்போதிலிருந்தே, கூகுள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
மீண்டும் ஜோக்கர் மால்வேர் தன் வேலையை ஆண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது. குறிப்பாக ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட இந்த புதிய 8 ஆப் வசதிகளும் பயனர்களின் எஸ்எம்எஸ், ஓடிபி போன்ற பல்வேறு தகவல்களை திருடும் என்று கூறப்படுகிறது.
பின்பு கூகுள் நிறுவனம் இந்த 8 ஆப் வசதிகளையும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த 8 ஆப்ஸ்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்தால் உடனே நீக்கிவிட கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட ஆப்ஸ்கள்
Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers, Super SMS