இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை மவுண்ட் எட்னா, கடந்த சில வாரங்களாக உயிர்ப்புடன் இருந்த இந்த எரிமலை நேற்று (திங்கட்கிழமை) அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
எரிமலை சாம்பல் மேகங்கள், விமான பயணங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அருகிலுள்ள கட்டானியா விமான நிலையம் திங்களன்று இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
விசிறியடிக்கப்பட்ட சாம்பல் பல நூறு அடி உயரத்திற்கு எழும்பின. தொடர்ந்து நெருப்புக் குழம்பையும் எட்னா எரிமலை வெளியேற்றியது.
எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள பெடாரா, ரெமிஸ்ட்ரியரி உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாயினர். மேலும் அப்பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 2 புள்ளி 7 என்ற அளவிற்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.