ஜனவரி 13ம் திகதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவது ஆரம்பமாகும் என மத்திய அரசாங்கம் அறிவிததுள்ளது.சென்னை மும்பாய் கொல்கத்தா போன்ற நகரங்களில் கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கான தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுகின்றன என மத்திய அரசாங்கம்; அறிவித்துள்ளது.
முதலில் முன்கள பணியாளர்களுக்கும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கும் மருந்து வழங்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் மருந்தினை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களான சேரமும் பாரத்பயோடெக்கும் இந்திய மருந்துகளை உலகம் முழுவதும் கொண்டுசேர்க்கப்போவதாக தெரிவித்துள்ளன.
இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன.மக்களுக்கும் நாட்டுக்கும் கொரோனா தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் கொரோனா தடுப்பூசிகளை உலக அளவில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் நாங்கள் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளோம்’
என தெரிவிக்கப்பட்டுள்ளது.