ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள ஹக்கீம் தான் தனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நான்கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை சோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.தன்னுடன் கடந்த பத்து நாட்களில் தொடர்பிலிருந்தவர்களை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.