காலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க 10 மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட ஒரு படையணி நிறுவப்பட்டுள்ளது.
தெற்கு மாகாண சபையின் தலைமைச் செயலாளர் ஆர்.சி. டி சொய்சா இந்த முடிவை எடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் குழு தேவையின்றி கூட்டம் கூடுவது, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வது, மற்றும் சுகாதார விதிகளைப் பின்பற்றுவது ஆகியவற்றைக் கண்காணிக்கும். மேலும் வழியில் அவர்கள் சந்திக்கும் மக்களின் உடல் வெப்பநிலையையும் எழுந்தமானமாக பரிசோதிக்கும்.
இந்த மோட்டார் சைக்கிள் அணிக்கு தேவையான செலவுகள் தெற்கு மாகாண சபையால் வழங்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.