தற்போது பயன்பாட்டிலுள்ள எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என நம்பிக்கை கொள்ள முடியாது என்று பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க வேண்டுமாயின் நாட்டிற்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
சில நாடுகள் உலக சுகாதார அமைப்பின் அனுமதியை பெறாமலேயே பொது மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
மேலும் இலங்கையில் சீனோபார்ம் மற்றும் அஸ்ட்ராசெனாகா தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.