கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் 20 வயதான மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொழும்பு மேலதிக நீதவான் லோசனி அபேவிக்ரம சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மாணவன் கல்வி கற்கும் பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியையாக கடமையாற்றும் அந்த ஆசிரியை, நான்கு வருடங்களாக பாடசாலைக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் கல்கிஸ்ஸ ஹோட்டல் ஒன்றிலும் இந்த மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அப் பாடசாலையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது , ஆசிரியை மாணவனை சந்தித்து ள்ளதாகவும் பின்னர் பாடங்களில் சந்தேகம் இருந்தால் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்து தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்.
அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக மாணவனின் கைத்தொலைபேசிக்கு வாட்ஸ் அப்பில் செய்திகளை அனுப்பியும் அவருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும் 18 வயது பூர்த்தி ஆகும் வரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்த மாணவனுக்கு 18 வயது பூர்த்தியானதும் கல்கிஸ்ஸ ஹோட்டலுக்கு 60 தடவைகளுக்கு மேல் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டலுக்குள் நுழையும்போது ஆசிரியை தனது அடையாள அட்டையை வழங்குவதாகவும் சகல செலவுகளையும் அவரே மேற்கொள்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.