யூடியூப்பில் இன்று பல கோடி வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றது.
யூடியூப் பற்றி பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள் மற்றும் ரகசியங்கள் குறித்து காண்போம்.
YouTube.com என்ற டொமைன் பிப்ரவரி 14, 2005 ஆம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது.
யூடியூப் தளத்தில் முதன் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ Me at the Zoo என்னும் வீடியோ தான். சான் டியாகோ உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இணை நிறுவனர் ஜாவேத் கரீம் [Jawed பதிவேற்றம் செய்தார். இது ஏப்ரல் 23ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் நடந்தது.
அக்டோபர் 9, 2006 ஆம் நாள் யூடியூப் தளத்தை கூகுள் நிறுவனம் 1.65 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010 மே மாதம் முதல் ஒரு நாளைக்கு 2 மில்லியன் முறை யூடியூப் பார்க்கப்பட்டது.மார்ச் மாதம் 2013ஆம் ஆண்டில் முதன் முதலாக ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்களை யூடியூப் அடைந்தது.
ஒரு நாளைக்கு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோவை ஒருவர் பார்த்து முடிக்க 82 வருடங்கள் ஆகும். அதுவும் பிறந்தது முதலே ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் பார்த்தால் தான் அதையும் பார்த்து முடிக்க முடியும். அப்படி பார்த்தால் எவராலும் பார்த்து முடிக்க முடியாது. யூடியூப்புக்கு ஆண்டுக்கு $15 பில்லியன் வருமானம் வருவதாக கடந்தாண்டு கூகுள் நிறுவனம் தெரிவித்தது.